மேற்கு வங்க கூலித்தொழிலாளிக்கு லாட்டரியில் ரூ1 கோடி பரிசு விழுந்த நிலையில் அவர் பாதுகாப்பிற்காக போலீசாரை அணுகியுள்ள சம்பவம் வைரலாக பரவி வருகிறது
மேற்கு வங்க மாநிலம் கல்னா பகுதியைச் சேர்ந்தவர் இந்திர நாராயணன். கூலித்தொழிலாளியான இவர் லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கத்தை வைத்திருக்கிறார். அப்படியாக இவர் நாகாலாந்து மாநில லாட்டரியை ரூ60க்கு வாங்கியுள்ளார். இந்த லாட்டரி சீட்டிற்கு தற்போது ரூ1 கோடி பரிசு விழுந்துள்ளது. இதைப் பார்த்ததும் திக்குமுக்காடி போன நாராயணன் முதலில் நம்பவில்லை.
பின்னர் அதை உறுதி செய்ததும் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தார். ஒரு பக்கம் லாட்டரியில் பரிசு விழுந்த சந்தோஷம் இருக்க மறுபுறம் பயமும் அவரை தோற்றிக்கொண்டது. லாட்டரி பணம் விழுந்ததை அறிந்து வெளியில் செல்லும்போது யாராவது தன்னைக் கடத்தி லாட்டரி சீட்டை பிடுங்கி விடுவார்களோ என அச்சம் வந்தது