நிலுவைத் தொகையை பல தவணைகளாக செலுத்தும் வாய்ப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வட்டி இப்போதைய நிலுவைத் தொகை அடிப்படையிலேயே வசூலிக்கப்படும்.
கடந்த அக்டோபர் 24ஆம் தேதி ஏஜிஆர் கணக்கீடு பற்றிய வழக்கில், தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் மத்திய அரசுக்கு 92 ஆயிரத்து 642 கோடி ரூபாய் நிலுவைத் தொகையைச் செலுத்த உத்தரவிட்டிருக்கிறது.
இந்த உத்தரவால் கடும் நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் என்பதால் ஏர்டெல், வோடபோன்-ஐடியா ஆகிய நிறுவனங்கள் மத்திய அரசை அணுகி, உத்தரவைத் தளர்த்துமாறு கேட்டுக்கொண்டன. இதன்பேரில், 42 ஆயிரம் கோடி ரூபாய் வரையான நிலுவையைச் செலுத்த 2 ஆண்டுகள் அவகாசம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.
புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இதனால், வோடபோன்-ஐடியா நிறுவனம் 23 ஆயிரத்து 920 கோடி ரூபாயையும் ஏர்டெல் 11 ஆயிரத்து 746 கோடி ரூபாயையும் ரிலையன்ஸ் ஜியோ 6 ஆயிரத்து 670 கோடி ரூபாயையும் செலுத்த 2 ஆண்டுகள் கிடைத்துள்ளது.