யாராவது ஏதாவதொரு கேள்வி கேட்டு, அதற்கு பதில் தெரியாவிட்டால் நாம் என்ன செய்வோம்? உடனடியாக கூகுள் செய்வோம், அப்படித்தானே? இப்படியாக நமக்கு தெரியாத விஷயங்களின் பதில்களை அறிய உடனடியாக 'கூகுளிங்' செய்து பார்க்க நம்மில் பெரும்பாலோர் பழகிவிட்டோம். பச்சரிசி பாயசம் வைப்பது எப்படி என்பது தொடங்கி ஆயிரக்கணக்கான ரூபாய்களை ஆன்லைன் பேங்கிங் வழியாக பரிமாற்றம் செய்வது வரை அல்லது மருந்துகளை வாங்குவது வரை அனைத்தையும் 'கூகுள்' வழியாக செய்யவே நாம் முனைகிறோம். ஆனால் நம்மில் பெரும்பாலான மக்கள் ஒரு குறிப்பிட்ட விடயத்தை மறந்து விடுகிறார்கள். அதாவது, கூகுள் என்பதும் ஒரு ஆன்லைன் தளம்தான், கூகுள் ஒன்றும் அதன் சொந்த உள்ளடக்கத்தை கொண்டிருக்கவில்லை. அங்கே உங்களுக்கு தேவையான தகவல்களை வழங்கும் வலைத்தளங்கள் உள்ளது, அவ்வளவுதான்! அதாவது"ஆன்லைன் ஆபத்துகள்" என்கிற பட்டியலின் கீழ் உள்ள அத்துணை "ஆப்புகளும்" கூகுளிலும் உள்ளது என்று அர்த்தம். ஒருவேளை நீங்கள் இதுபோன்ற ஆப்புகளில் அல்லது ஆபத்துகளில் சிக்கி கொள்ளாமல் இருக்க விரும்பினால் எக்காரணத்தை கொண்டும் கூகுள் வழியாக இந்த 12 மேட்டர்களையும் தேட வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறீர்கள்! மீறி தேடினால், பிறகு நாங்கள் பொறுப்பில்லை\
01. கூகுள் வழியாக ஆன்லைன் பேங்கிங் தளங்களை தேட வேண்டாம்!
ஒருவேளை உங்கள் வங்கியின் சரியான அதிகாரப்பூர்வ URL ஆனது உங்களுக்குத் தெரியாவிட்டால், அதை கண்டுபிடிக்க வெறுமனே உங்கள் வங்கி பெயரை டைப் செய்து ஆன்லைன் பேங்கிங் என்று தேடுவதை தவிர்க்கவும். ஏனெனில் கூகுளில் பல போலியான ஆன்லைன் பேங்கிங் வலைத்தளங்கள் உள்ளன.
பெரும்பாலான போலியான வலைத்தளங்கள் ஆனது குறிப்பிட்ட வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் போல தோற்றமளிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். ஆக உங்கள் பணத்தின் பாதுகாப்பை உறுதிசெய்ய உங்கள் வங்கியின் அதிகாரபூர்வமான ஆன்லைன் வங்கி போர்ட்டலின் URL ஐ கூகுளில் உள்ளிடவும். இல்லையெனில் ஃபிஷிங் போன்ற ஆன்லைன் திருடர்களின் கைகளில் தானாகவே போய் சிக்கிகொள்வீர்கள்.
02. கூகுள் வழியாக கஸ்டமர் கேர் எண்களை தேட வேண்டாம்!
இது மிகவும் பிரபலமான ஆன்லைன் மோசடிகளில் ஒன்றாகும். இம்மாதிரியான மோசடிகளில் ஈடுபடுவபர்கள் போலியான வணிக பட்டியல்களையும், கஸ்டமர் கேர் எண்களையும் வலைத்தளங்களில் பதிவு செய்து வைத்திருப்பார்கள். அதை உண்மை என்று நம்பி அவர்களின் கையில் சிக்கும் வாடிக்கையாளர்களிடம் விலாசம் அல்லது வங்கி விவரங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்கள் தொடங்கி பணம் பறிப்பு வரையிலான மோசடிகள் கட்டவிழ்க்கப்படும்.
ஆப்ஸ் மற்றும் சாப்ட்வேர் டவுன்லோட்டிற்காக கூகுளை அணுக வேண்டாம்!
நீங்கள் எதாவதொரு மொபைல் ஆப்பை டவுன்லோட் செய்ய விரும்பினால், தயவு செய்து வெறுமனே அதன் பெயரை டைப் செய்து கூகுள் வழியாக தேட வேண்டாம். அது Android ஆப் என்றால் Google Play-விற்கு செல்லவும் அல்லது அது ஐஓஎஸ் ஆப் என்றால் ஐபோன்களுக்கான ஆப் ஸ்டோருக்கு செல்லவும், அதாவது அந்தந்த இயங்குதளத்திற்கான அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோருக்கு செல்லவும், அங்கே குறிப்பிட்ட ஆப்ஸ்களை தேடவும். மாறாக வெறுமனே கூகுள் வழியாக ஆப்ஸ்களை தேடினால், மால்வேர் உள்ளடக்கத்துடன் கூடிய போலி ஆப்ஸ்களை நீங்கள் இன்ஸ்டால் செய்வதற்கான ஆயிரமாயிரம் வழிகள் ரெடியாக இருக்கும்