காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் நகரத்தில் பா.ம.க.வில் இருந்து விலகி நூற்றுக்கும் மேற்பட்டோர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் மதுராந்தகம் நகர பொறுப்பாளராக புதியதாக நியமிக்கப்பட்ட பூக்கடை சி.சரவணன் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான
எம்.கோதண்டபாணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மண்டல பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான சைதை செந்தமிழ்ச்செல்வன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நகர பொறுப்பாளராக புதிதாக நியமிக்கப்பட்ட பூக்கடை சி.சரவணன் கட்சி உறுப்பினர்களிடையே அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றினார். முடிவில் மதுராந்தகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தீவிர உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடுவது
பூத்கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.